ஆசையா இருந்துச்சு ஆனா, அரவிந்த்சாமி கூட நடிக்கவில்லை.. ரகசியத்தை உடைத்த பிரபலம்..!

Author: Vignesh
1 July 2024, 7:10 pm

90ஸ் காலத்தில் இருந்து நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை மீனா. இவர் உச்ச நடிகர்கள் பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமானார். மீனா நடித்தால் அந்த படம் ஹிட் ஆகிவிடும் என தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் நம்பும் வகையில், ஒரு ராசியான நடிகையாக பார்க்கப்பட்டார். அந்த வகையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒட்டுமொத்த தென்னிந்திய மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்தார் மீனா.

முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் மீனா அறிமுகமானார். இளம் வயதிலேயே ஹீரோயினான மீனா அதன் பிறகு தொட்டதெல்லாம் ஹிட் என்ற வகையில், ஒவ்வொரு திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக பார்க்கப்பட்டது. கணவரின் மறைவுக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் நடித்து வரும் மீனா சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது, நடிகர் அரவிந்த்சாமி குறித்து பேசியுள்ளார்.

meena

அதில், அவர் அரவிந்த் சாமியோடு ஒரு படத்தில் கூட நான் நடிக்கவில்லை. அவரோடு ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன். ஒரு படத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், கால்ஷிப்ட்டு பிரச்சினை காரணமாக நடிக்க முடியாமல் போனது. ரோஜா படத்தில் அரவிந்த்சாமியின் நடிப்புக்கு ரசிகையாக மாறிவிட்டேன். அதன்பின் தான் அவருடன் நடிக்க வேண்டும் என்று ஆசை எனக்கு வந்தது என்று மீனா வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!