என் பொண்ணு கண்டவன் கூட எல்லாம் ஆட மாட்டாள்… மேடையில் அஜித்தை அவமானப்படுத்திய பிரபல நடிகையின் அம்மா!

Author: Shree
3 May 2023, 6:30 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். மீனாவின் அணைத்து படங்களின் ஷூட்டிங்கிற்கு அவரது அம்மா கொடுக்காவே இருப்பார். எந்த பொது நிகழ்ச்சி என்றாலும் அம்மா சொன்னால் தான் போகவேண்டும் என்ற கட்டுப்பாடிற்குள் வளர்ந்தவர் நடிகை மீனா.

அப்படித்தானே ஒரு சமயம் சிறந்த அறிமுக நடிகருக்கான விருதினைபிரபல நாளிதழ் ஏற்பாடு செய்திருந்த விழாவில் அஜித் பெற்றுக்கொண்டார். அப்போது தொகுப்பாளினி அஜித் – மீனா இருவரையும் சேர்ந்து மேடையில் நடனமாட சொல்லிக்கேட்டார். அதற்கு அஜித்தும் ரெடி ஆனார். அந்த சமயத்தில் கூட்டத்தில் அமர்ந்திருந்த மீனாவின் அம்மா, என் பொண்ணு கண்டவன் கூட எல்லாம் ஆடமாட்டாள்.

அவள் ரஜினி போன்ற பெய நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அப்பேற்பட்டவள் அறிமுக நடிகன் கூட எல்லாம் ஆடமாட்டாள் என கத்தி கூச்சலிட்டார். உடனே அஜித்தின் முகம் சோர்ந்து தலைகுனிந்து அமைதியாக ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்றார். மீனா தரமசங்கடத்திற்கு ஆளாகி அம்மாவை பார்த்து ஏன் இப்படி பண்ற என கேட்டார். உடனே மேடை ஏறி வந்து தரதரவென மீனாவை இழுத்துச்சென்றார். அஜித் இதை விட பெரிய அவமானம் அவர் வாழ்க்கையில் பட்டிருக்கமாட்டார் என செய்யார் பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?