படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. போதைப்பொருளுடன் வந்த முன்னணி நடிகர்..!!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2025, 4:13 pm
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படியுங்க: சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!
மலையாள நடிகையான வின்சி அலோசியஸ்,விக்ருதி படத்தில் அறிமுகமாகி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறிர் என கூறியது மல்லுவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், ஒரு மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த போது என்னுடன் இணைந்து நடித்த முன்னணி நடிகர் படப்பிடிப்பில் போதைப் பொருளை பயன்படுத்தினார்.

உடனே அந்த படத்தில் இருந்த விலகுவதாக கூறினேன். ஆனால் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாலும், தான் நடிக்காவிட்டால் அந்த படம் வெளியாகாது என்பதால் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.

அந்த நடிகர் தனிப்பட்ட முறையில் போதை பொருள் பயன்படுத்தியிருந்தால் நான் கண்டுகொண்டிருக்கமாட்டேன். படப்பிடிப்பு தளளத்தல் அவர் போதைப் பொருளை அசால்டாக பயன்படுத்துகிறார் என கடுமையாக விமர்சித்தார்.