இது முடிச்சுக்க வேண்டிய நேரம்: விவாகரத்து முடிவில் நமீதா?.. அவரே அளித்த விளக்கம்..!
Author: Vignesh28 மே 2024, 5:24 மணி
கவர்ச்சி நடிகையான நமீதா தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ,ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் “எங்கள் அண்ணா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தமிழில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடிக்க தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத்துடங்கினார்.
மேலும் படிக்க: எனக்கு அவ்வளவு தான் வேல்யூவா?.. Adjustment-க்கு ரேட் பேசிய ரேகா நாயர்..!
ஆம், நடிகை நமீதாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோவிலே கட்டி உள்ளார். தமிழில் டாப் நடிகையாக இருந்த நமீதாவுக்கு படங்களுக்கு படம் உடல் எடை கூடிக்கொண்டே போக . மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார். இதனால் இடையில் கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் Re -Entry கொடுத்தார். அதே ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
மேலும் படிக்க: அந்த விஷயத்தால் சுந்தர்.C 2 வருஷம் சும்மா இருந்தாரு.. குஷ்பு வேதனை..!
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நமிதா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் உலா வந்த நிலையில், இது குறித்து தற்போது நமிதாவே விளக்கம் கொடுத்திருக்கிறார். நாங்கள் விவாகரத்து செய்து கொள்ள போவதாக வெளியான செய்திகள் சில தினங்களுக்கு முன்னரே பார்த்தேன். அதன் பிறகு தான் நான் என் கணவருடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தேன்.
இருப்பினும், எங்கள் விவாகரத்து செய்தி வதந்தியாக இன்னும் பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இது முடிச்சுக்க வேண்டிய நேரம் எதன் அடிப்படையில், இது போன்ற செய்திகள் வெளியாகிறது என்று எனக்கு புரியவில்லை. ஆனால், அதே நேரத்தில் நடிகையான பின்னர் நிறைய வதந்திகளை சந்தித்து விட்டதால், நானும் என் கணவரும் இந்த வதந்தியை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நாங்கள் இருவரும் இந்த வதந்தியை படித்து சிரித்து மகிழ்தோம் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, நமீதா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக வெளியான செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0
0