ஆத்தாடி இம்புட்டு விலையா?.. ஷங்கர் மகள் கல்யாணத்தில் கண்ணைப் பறித்த நயனின் Watch..!

Author: Vignesh
23 April 2024, 5:24 pm
nayanthara - updatenews360.jpg 2
Quick Share

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

nayanthara vignesh shivan

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

nayanthara - updatenews360.jpg 2

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

nayanthara - updatenews360.jpg 2

மேலும் படிக்க: ஜாதி பார்த்து ஒதுக்கி வைக்கப்பட்ட தனுஷின் பெற்றோர்கள்.. ஐஸ்வர்யா விவாகரத்திற்கு இதுதான் காரணமாம்..!

இப்படியான நேரத்தில் நயன்தாரா புதிய பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். 9 skin சருமம் சார்ந்த பொருட்களை தயாரித்துள்ளார். இந்நிலையில், திடீரென நடிகை நயன்தாராவின் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, நடிகை நயன்தாரா இயக்குனர் சங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணத்தில் விக்னேஷ் சிவனுடன் வந்தார். அதில், இளஞ்சிவப்பு நிற புடவை அணிந்து வெள்ளி நிறத்தில் கனமான நெக்லஸ் அணிந்து வந்திருந்தார்.

மேலும் படிக்க: இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு?.. பெரிய இடத்து பையனுடன் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்..!

அதோடு, கல்யாண ரிசப்ஷனில் நடிகை நயன்தாரா ஒரு ஆடம்பரமான வாட்ச் அணிந்து வந்தார். அது அனைவரையும் கவர்ந்தது. அவர் அணிந்த வாட்ச் ரோலக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெச்சுவல் 36. இளஞ்சிவப்பு (பிங்க்) நிற டயல் மற்றும் சிப்பி பிரேஸ்லெட் கொண்டது. மேலும், Oystersteel என்ற உலோகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வாட்ச் எப்போதும் மினுமினுப்புடன் கண்களைப் பறிக்கும் அழகுடன் இருக்குமாம். இந்த ஸ்டைலிஷ் வாட்சின் விலை ரூ.5.30 லட்சம் என்று கூறப்படுகிறது.

Views: - 108

0

0