உங்களுக்கு வயசே ஆகாதா? கொஞ்சம் கொஞ்சமா கிளாமர் ஃபார்முக்கு வந்த நயன்தாரா – நச் கிளிக்ஸ்!

Author:
13 November 2024, 10:26 pm

நடிகை நயன்தாரா:

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

nayanthara

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகம் ஆனார்.

nayanthara

திருமணத்திற்கு பிறகும் குறையாத மவுஸ்:

தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன் 2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

nayanthara

உங்களுக்கு வயசே ஆகாதா?

தொடர்ந்து நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இது தவிர தொழில் ரீதியாகவும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நயன்தாரா எப்போதும் இல்லாத வகையில் மாடர்ன் உடை அணிந்து சற்று கொஞ்சம் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஒட்டுமொத்த வாலிப ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.சமீப நாட்களாக நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் ஃபார்முக்கு மாறி வருவதை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு வயசு ஆகாதா? என கமெண்ட் செய்து ஹார்டின்ஸ் பறக்கவிட்டு வருகிறார்கள்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?