சம்பள விஷயத்தில் கறாராக இருக்கும் நயன்தாரா…! புலம்பும் தயாரிப்பாளர்..!

Author: Rajesh
9 March 2022, 4:36 pm
Quick Share

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது. மேலும் பிரபல நடிகைகளில் அதிக பட்சமாக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இவர் இருந்து வருகிறார்.

ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கும் இவரைப் பார்த்து மற்ற நடிகைகள் அனைவரும் பொறாமைபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது, தன்னுடைய சம்பளத்தை மேலும் அதிகமாக உயர்த்தி இருக்கிறார்.

இயக்குனர் ரவிச்சந்திரன் பெண்களை மையப்படுத்தி உருவாக இருக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இதனிடையே கதையின் நாயகியாக பல திரைப்படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தவர் தான் நடிகை நயன்தாரர்.

இந்த நிலையில், இந்த படத்திற்கும் அவர் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் நடிப்பதற்கு அவர் அதிகபட்ச சம்பளமாக 10 கோடி கேட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பளத்தை இவ்வளவு கோடி அதிகப்படுத்தி இருப்பது அவருக்கும் தயாரிப்பாளருக்கும் சற்று அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Views: - 548

1

0