கோடான கோடி பாட்டுல ஆடுன சூடான நடிகை , இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரியுமா?

6 March 2021, 8:17 am
Quick Share

2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான ‘சரோஜா’ படத்தில் பலர் ‘கோடான கோடி’ என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த கால கட்டத்தில் இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது.

அந்த பாடலில் ஒரு கவர்ச்சியான நடனமாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை நிகிதா. மும்பை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் சின்னத்திரைக்குள் நுழைந்தார். தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கன்னடத்தில் ரொம்ப பேமஸ். இவர் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக, தர்ஷனின் மனைவி கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த விஷயம் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், தர்ஷன் மனைவி அளித்த புகாரின் பேரில் இவர் மீது கன்னட சினிமா சங்கம் நடவடிக்கையை எடுத்தது. இதனால் நிகிதாவிற்க்கு கன்னட திரைப்பட சங்கம் 3 ஆண்டுகள் தடை விதித்தது. கடந்த சில காலமாக புகைப்படங்கள் எதுவும் Upload செய்யாமல் இருந்த இவர் இப்போது போட்டோக்களாக போட்டு தள்ளுகிறார்.

இந்நிலையில் நிகிதா தனது மகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள் நிகிதாவிற்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Views: - 2

4

0