முகமூடி படத்தின் போது 2 பேரோட வந்தாரு, இப்போ என்னடான்னா..! – பூஜா ஹெக்டே காட்டிய பந்தா !

Author: kavin kumar
17 August 2021, 5:17 pm
Quick Share

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . ஆனால் அந்த படம் சரியாக ஓடாததால் தெலுங்கு சினிமாவிற்கு தாவி விட்டார். இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார். அதன்பின் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த பூஜா ஹெக்டே, இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது.

இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.தற்போது இவர் தன்னை இயக்குனர்களுக்கு அவ்வபோது நினைவு படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே பற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி கூறியுள்ளார். முகமூடி படத்தில் நடித்த போது தனக்கு அசிஸ்டெண்ட்டாக 2 பேரை அழைத்து வந்தார். ஆனால் தற்போது 12 பேருடன் வந்து தயாரிப்பாளருக்கு கூடுதல் செலவை இழுத்து விடுகிறார். பூஜா ஹெக்டே மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளது. இதனா‌ல் தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தியுள்ளார். இது நயன்தாரா வாங்கும் சம்பளத்திற்கு இணையானது என கூறியுள்ளார்.

Views: - 1253

46

14