அஜித் நடித்த ரெட் பட ஹீரோயின் ‘ ப்ரியா கில் ‘ இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க…!

4 August 2020, 2:30 pm
Quick Share

‘ஒல்லிகுச்சி உடம்புகாரி, ஒட்டுகிட்ட உடும்புகாரி’ இந்த பாடலை யாராலும் மறக்க முடியாது. பிரபல comedy நடிகர், சிங்கம் புலி இயக்கத்தில் அஜித் நடித்த ரெட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியா கில். இவர் பாலிவுட்டில் பிரபல நடிகை, இவர் 25 வருடங்களுக்கு முன்பு மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவதாக வந்தவர்.

இதன் மூலம், அடுத்த வருடத்திலியே ஹிந்தி சினிமாவில் அறிமுகமானார். ஹிந்தி மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, தமிழ், பஞ்சாபி, போஜ்பூரி மொழிகளில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தவர். கடைசியாக 15 வருடங்களுக்கு முன் இரண்டு ஹிந்தி படம் நடித்தார்.

வயதான காரணத்தினால் பெரிதாக நடிக்க வாய்ப்பு அமையவில்லை. ஆச்சரியம் என்ன என்றால் ஷாருக்கான், சல்மான் கானுடன் நடித்தவர். இவர் அறிமுகமான அதே ஆண்டில் தான் ராணி முகர்ஜி, சுஷ்மிதா சென் கூட அறிமுகமாகினர். அவர்கள் இன்னும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

துவண்டு போன பிரியா கில், தற்போது 43 வயதிலும் மனம் தளராமல், டென்மார்க்கில் மாடெல்லிங் ஏஜென்சி ஒன்றை அங்கு நடத்தி வருகிறாராம்.

Views: - 16

0

0