ரக்ஷிதாவா இது? இப்படி இருக்காங்களே.. சிவகார்த்திகேயனுடன் வைரலாகும் வீடியோ..!

Author: Vignesh
10 July 2024, 11:12 am

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: கமலை பார்த்த மாதிரி ஏன் இளையராஜாவை பாக்கல?.. – மஞ்சுமெல் பாய்ஸ் சர்ச்சை பற்றி பேசிய நடிகர்..!

இதனிடையே, ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து பெரும் சூழ்நிலையில் ரக்ஷிதாவின் தந்தை சமீபத்தில் மரணமடைந்தார். இதற்கிடையில், தினேஷ் தன் மனைவிக்காக பிக் பாஸ் சென்றதாகவும், அங்கு சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Rachitha-updatenews360-1

சமீபத்தில், ரட்சிதா பேட்டி ஒன்றில் தான் ஆண்களைப் பார்த்து ஏங்கி இருப்பதாகவும் ஏனென்றால், ஒரு நிகழ்ச்சி கோ வேலைக்கு தயாராக வேண்டும் என்றால் அவர்களுக்கு ஐந்து நிமிடம் போதும் தயாராகி விடுவார்கள். ஆனால், பெண்கள் எங்களால் அப்படி தயாராக முடியவில்லை என்று வேதனைப்பட்டதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும், புடவை அணியும் போது தான் சிரமப்பட்டு அணிவதாகவும், அதுதான் தன்னுடைய அடையாளம் என்றும் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்துள்ள fire படத்தின் போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Rachitha-updatenews360-1

மேலும் படிக்க: பணம் இருக்கா என் மகளை கூட்டிட்டு போங்க.. உச்ச நடிகர் செய்த மோசமான செயல்..!

இந்நிலையில், அழகில் மின்னும் நடிகையான ரக்ஷிதா சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சிகள் கலந்து கொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில், ரக்ஷிதா கருப்பான தோற்றத்தில் சென்றுள்ள வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ரக்ஷிதாவா இது இப்படி இருக்காங்களே என்று கமெண்ட்களில் தெரிவித்து வந்தனர். ஆனால், ஒரு சீரியல் ப்ரோமோஷன்காக தான் ரக்ஷிதா அந்த லுக்கில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!