அதை பண்ணவே கூடாதுன்னு சொல்லிட்டாங்க.. ஹார்மோன் பிரச்சினையால் அவதிப்படும் ரக்ஷிதா..!

Author: Vignesh
7 October 2023, 12:00 pm
Rachitha-Mahalakshmi-updadatenews360-1
Quick Share

2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலமாக சின்னதிரையில் அறிமுகமானவர் ரக்‌ஷிதா. இவர் அதே சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரையே 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ரக்ஷிதா.

பெங்களூரைச் சேர்ந்த ரக்ஷிதா கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவர் சேர்ந்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘நாச்சியார்புரம்’ என்ற சீரியலிலும் நடித்தனர். தொடர்ந்து, தற்போது, கலர்ஸ் தமிழில் புதிதாக துவங்கப்பட்ட ‘சொல்ல மறந்த கதை’ என்ற புத்தம்புது சீரியலில் ரக்ஷிதா கதாநாயகியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே, அவரது கணவர் தினேஷுக்கு சீரியல்களில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் இதனால் ரக்ஷிதா மற்றும் தினேஷ் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர் . விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

இந்நிலையில், இவர் தனது உடலில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் சில பேருக்கு சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும். நான் எல்லாம் மோந்து பார்த்தாலே உடல் எடை கூடிவிடும். அப்படியான ஹார்மோன் பிரச்சினை எனக்கு இருக்கிறது. ஒரு நடிகையாக உடல் எடையை பராமரிப்பது என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும்.

Rachitha-updatenews360-1

அப்படி இருக்கும் பொழுது என்னுடைய உடல் எடை கூடிவிடவே கூடாது என்பதில் நான் மிகவும் கவனமுடன் இருக்கிறேன். மருத்துவரை பார்க்க சென்றால் நீங்கள் சாப்பிடவே வேண்டாம். ஒரு உணவை முகர்ந்து பார்த்தாலே போதும் உங்களுக்கு உடல் எடை கூடிவிடும் என்று கூறினார்கள். சாப்பிடவே வேண்டாம் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தாலே உடல் எடை கூடி விடுவீர்கள். உப்பிட்டு போய்விடுவீர்கள் என்று கூறியிருக்கிறார். நான் உப்பி விடக்கூடாது என்பதற்காக என்னுடைய உணவுமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறேன் என்று ரக்ஷிதா மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Views: - 510

1

4