2ஆவது கணவர் மீது புகார் கொடுத்து வாபஸ் பெற்ற நடிகை ராதா!

16 April 2021, 6:23 pm
Quick Share

2ஆவது கணவர் மீது கொடுத்த புகாரை நடிகை ராதா திரும்ப பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில், முரளி நடிப்பில் வந்த சுந்தரா டிராவல்ஸ், நவரச நாயகன் கார்த்திக் நடித்த கேம், சத்யராஜ் நடிப்பில் வந்த அடாவடி மற்றும் காதவராயன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை ராதா. இவர், முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில், எண்ணூர் காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் வசந்த ராஜா (44) மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது: திருவான்மியூர் காவல் நிலையத்தில் வசந்தராஜா பணியாற்றி வந்த போது அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தோம். அப்போது எனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த போதிலும் எனக்கு தாலி கட்டி என்னை 2ஆவது மனைவியாக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு வடபழனி காவல் நிலையத்தில் பணி மாறுதல் பெற்று வந்தார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். அப்போது சினிமா வாய்ப்பு தொடர்பாக பலரும் என்னை தேடி வீட்டிற்கு வரும் போது அவர்களுடன் இணைத்து என்னை தவறாக பேசி வருகிறார். இதனால், எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சந்தேகத்தால் என்னை அடிக்கடி சித்ரவதை செய்து வந்தார். இதன் காரணமாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து அவரை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து, வசந்தராஜாவை போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும், வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அதோடு, தான் அளித்த புகாரையும் வாபஸ் பெற்றதாகவும் நடிகை ராதா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 76

0

0