பிடிச்ச ஹீரோ கிடைக்கணும்; நான் நடிக்க ரெடி; தமிழ் சினிமாவின் கனவுக்கன்னி சொன்னது என்ன?

Author: Sudha
22 July 2024, 11:26 am

2000 கால கட்டத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா.தன்னுடைய அழகாலும் கொஞ்சிப் பேசும் மொழியாலும் நிறைய ரசிகர்களை ஈர்த்தவர். சில தினங்களுக்கு முன்பு நடிகை ரம்பா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று நடிகர் விஜய்யை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் காரணமாக அமைந்ததா? அல்லது சினிமா காரணமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.அது மட்டுமல்லாமல் விஜயின் கடைசிப் படமான 69வது படத்தில் ரம்பா தான் நடிக்க இருக்கிறார் என்றெல்லாம் தமிழ்த்திரை உலகில் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை ரம்பா இந்த சந்திப்பை பற்றி பேசும் போது என்னுடைய குழந்தைகளுக்கு நடிகர் விஜய் என்றால் மிகவும் பிடிக்கும். நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள் அதனால் குழந்தைகளுடன் சென்று அவரை சந்தித்தேன் என்றார்.

மேலும் நினைத்தேன் வந்தாய் ஷூட்டிங் நடந்த போது விஜய் அதிகமாக பேச மாட்டார் அமைதியாக இருப்பார்.ஆனால் இப்போது என் குழந்தைகளுடன் நன்றாக பேசி விளையாடினார் என்றார்.நடிக்க வேண்டும் என்ற சூழல் வரும்போது உடன் நடிக்கும் நடிகரைப் பிடிக்க வேண்டும் அந்த கதாபாத்திரத்தை பிடிக்க வேண்டும் அப்படிப்பட்ட வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று சொன்னார். ரம்பாவை மீண்டும் சினிமாவில் பார்க்க ரசிகர்கள் இப்போதே ஆவலாய் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!