ஹிந்தி ஹீரோவை கட்டிப்பிடித்த ரம்பா.. தென்னிந்திய நடிகர்கள்-னா சும்மாவா? கடுகடுத்த ரஜினி..!

Author: Vignesh
3 January 2024, 4:54 pm

‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. இதன்பின் ‘செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார்.

rambha

நடிகை ரம்பாவிற்கு கடந்த 2010ஆம் ஆண்டு இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதனிடையே அடிக்கடி தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். நடிகை ரம்பா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறாராம்.

rambha

மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ள ரம்பா சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், அதில் ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்ததை பற்றி சந்தோஷமாக பகிர்ந்து உள்ளார். அப்போது, சல்மான்கான் ஒரு நாள் செட்டுக்கு வந்த போது ரம்பா கட்டிப்பிடித்து வரவேற்றுள்ளார்.

rambha

இதை பார்த்த ரஜினி ரம்பாவை வம்பு இழுக்க வேண்டும் என்று கோபமாக என்ன ஹிந்தி ஹீரோ என்றால் கட்டிபிடித்துதான் வரவேற்பீர்கள். ஆனால், தென்னிந்திய நடிகர்கள் என்றால் சும்மாவா ஒரு குட் மார்னிங் மட்டும் சொல்லிட்டு ஓரமா போய் உட்கார்ந்து விடுகிறீர்கள் என கோபமாக இருப்பது போல் ரஜினி நடித்து ரம்பாவை வம்பு இழுத்ததாக ரம்பா தெரிவித்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!