நாங்க பிரிஞ்சிட்டோம்…. என்னை ஏமாற்றி என் நம்பிக்கையை உடைத்தார்… ராஷ்மிகா அறிக்கை!

Author: Shree
23 June 2023, 12:30 pm

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , இந்தி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சுல்தான் படத்தில் நடித்து அறிமுகமான ராஷ்மிகா அதையடுத்து விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் அண்மையில் தன்னுடைய மேனேஜர் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக கூறி வேலையை விட்டே அவரை தூக்கிவிட்டார். இந்த செய்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அதில், எங்கள் இருவரும் இடையே இடையே எந்தவித மோதலும் இல்லை. இந்த பிரிவு சுமூகமானது தான். நாங்கள் இருவரும் இனிமேல் சுதந்திரமாக வேலை செய்ய முடிவெடுத்து உள்ளோம். எங்கள் பிரிவை பற்றி பரவும் வதந்திகள் எதுவும் உண்மையில்லை எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ராஷ்மிகா. மேனேஜர் உடனான பிரிவு குறித்து நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?