யூஸ் பண்ணிட்டு கறிவேப்பிலை போல தூக்கிப்போடுறாங்க.. ரேகா ஆதங்கம்..!

Author: Vignesh
28 October 2023, 11:32 am

90 காலகட்டங்களில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை ரேகா. இவர் தமிழ் திரைப்படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு படங்களை நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

rekha-updatenews369

பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் திரைத்துறையில் இருந்து வெளியேறி சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற இவர் தற்போது மீண்டும் கதாநாயகியாக வரவிருக்கிறார்.

rekha-updatenews369

தற்போது, அறிமுக இயக்குனர் மாலதி நாராயண இயக்கத்தில் உருவாக்கும் மிரியம்மா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் எழில்துறை, சினேகா குமார், அனிதா சம்பத் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

rekha-updatenews369

இந்நிலையில், இதுகுறித்து பேசிய ரேகா பாரதிராஜா சார் எப்படி கடலோர கவிதைகள் படத்தில் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்தாரோ அதேபோல மிரியம்மா படத்தில் ஒரு நல்ல கேரக்டர் எனக்கு கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனருக்கு மிகவும் நன்றி. முன்பு கதாநாயகனுக்கு சரிசமமாக கதாநாயகி பாத்திரம் இருந்தது. ஆனால், அந்த நிலை மாறி தற்போதைய கதாநாயகிகளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. 40 வயதான நடிகைகளை கருவேப்பிலை போல தூக்கி போடுறாங்க என தனது ஆதங்கத்தை ரேகா தெரிவித்துள்ளார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!