முதன் முறையாக மகளின் புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரித்திகா – குவியும் லைக்ஸ்!

Author:
6 November 2024, 10:09 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி டிஆர்பி உச்சத்தை தொட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் அம்ரித்தா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா. சீரியல் மட்டும் இல்லாமல் இவர் குக் வித் கோமாளி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.

ரித்திகா விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன்1ல் வினோதினி என்ற கேரக்டரில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

rithika

அதன் பிறகு விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் 8 மற்றும் நம்மவர் கமல் போன்ற பல ரியாலிட்டி ஷோக்கலில் கலந்து கொண்டு பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

rithika

இதனிடையே கடந்த 2022-ஆம் ஆண்டில் ரித்திகாவிற்கு வினு என்பவருடன் கேரள முறைப்படி மிகவும் சிம்பிளாக திருமணம் நடைபெற்றது. அதை எடுத்து ரித்திகா கர்ப்பமாக இருந்ததை அடுத்து அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் முதன் முறையாக தனது அன்பு மகளின் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

  • Shibitha Shivanna found dead பிரபல நடிகை வீட்டில் மர்ம மரணம்? கொலையா? தற்கொலையா?
  • Views: - 78

    0

    0