நடிகை ரோஜாவுக்கு என்ன ஆச்சு? அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – ரசிகர்கள் கவலை!

Author: Shree
10 June 2023, 1:45 pm

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ரஜினி, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா தமிழ் சினிமாவிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

2002-ஆம் ஆண்டு ரோஜா இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அரசியலில் ஆர்வம் கொண்ட ரோஜா 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 2009-ல் அக்கட்சியை விட்டு ரோஜா விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் பின்னாளில் எம்.எல்.ஏ ஆனார். இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ரோஜா உடல்நல குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்த செய்தி வெளியானதும் அவரது ரசிகர்கள் ஏன்? என்ன ஆச்சு என பதறிவிட்டனர். நேற்று இரவு ரோஜாவுக்கு திடீரென கால் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். சிகிச்சைக்கு பிறகு ரோஜாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தகவல் தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்கள்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?