40 வயதிலும் குறையாத கவர்ச்சி.. சதா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Recent Photo..!

Author: Vignesh
8 May 2024, 7:03 pm
Quick Share

அழகான , அம்சமான நடிகையாக தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை சதா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார். நடிகை சதா முதல் முதலில் ஜெயம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அவருக்கு மாபெரும் புகழை தேடித்தந்த அப்படத்தின் தமிழ் ரீமேக்கிலும் ஜெயம் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து தமிழ் மொழியில் நடிகையாக அறிமுகமானார். இதன் மூலம் கோலிவுட்டிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெயம் படத்தில் நடித்ததற்காக சதாவிற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

மேலும் படிக்க: விஜய்யின் Goat பட Climax-ல் கேமியோ ரோலில் பிரபல ஹீரோ.. அட இவரா? வந்தா நல்லா இருக்குமே..!

அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகை சதா அவர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த பெரிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம்ஜோடியாக அந்நியன் திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்தார்.

இதனை தொடர்ந்து, பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நடிகை சதா ஒரு சில தோல்வி படங்களால் மார்க்கெட்டை இழந்தார். நடிகை சதா தமிழில் இறுதியாக நடித்த படம் “டார்ச் லைட்” அதன் பிறகு நடிகை சதாவை வேறு எந்த படங்களில் காண முடியவில்லை. இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

மேலும் படிக்க: விஜய்யின் Goat பட Climax-ல் கேமியோ ரோலில் பிரபல ஹீரோ.. அட இவரா? வந்தா நல்லா இருக்குமே..!

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா அவ்வப்போது கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சதா, புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் 40 வயதும் குறையாத கவர்ச்சியில் இருக்கிறார் என்று கமெண்ட்களில் தெரிவித்து வருகிறார்கள்.

Views: - 109

0

0

Leave a Reply