அடேங்கப்பா எம்புட்டு பெரிய மனசு சாய் பல்லவிக்கு..! ‘NO’ சொன்னால் அதன் அர்த்தம் ‘NO’ தான்’ ..!
Author: Mari12 January 2022, 12:05 pm
நடிகை சாய்பல்லவி முதல் படத்திலேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் . மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற ‘பிரேமம்’ படம் மூலமாக தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார்.
மலர் டீச்சராக வந்த சாய் பல்லவியை முதலில் அனைவரும் யாரோ மலையாள நடிகை என்றுதான் நினைத்தனர். ஆனால், ‘இது நம்ம கோத்தகிரிக்காரப் பொண்ணுப்பா’ என சாய் பல்லவியை தமிழ் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்தனர். சாய் பல்லவி வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவையில் என்பதால் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களில் மேலும் நெருக்கமானார்.
தொடர்ந்து மலையாளத்தில் கலி, என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார்.
இந்த படமும் சாய் பல்லவி கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
தமிழ்ப் பெண்ணான இவர் தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்ற ஏக்கம் தமிழ் ரசிகர்களிடையே இருந்து நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘கரு’ படத்தில் நடித்தார். எந்தக் கதாநாயகிகளும் ஏற்க தயங்கும், அம்மா கேரக்டரில் நடித்தார். தொடர்ந்து மாரி 2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் கோரியோகிராபியில் தனுஷ், சாய் பல்லவி ஆட்டம் போட்ட ‘ரவுடி பேபி’ பாடல் தற்போது யூடியூப்பில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இந்தப் பாடலில் தனுஷுக்கே டஃப் கொடுத்து அசத்தினார். இதனிடையே, பணத்துக்காக பல நடிகர், நடிகைகள், பொதுமக்களுக்கு எந்த பயன் இல்லாத சில விளம்பர படங்களில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் தனது அட்ராசிட்டியான நடனத்தினால் சர்வதேச அளவில் சாய் பல்லவி பெயர் பெற்றுள்ளார். அதன் பின்னர் பல்வேறு விளம்பரங்கள் தேடி வந்தன. முகப்பருவுக்கான மருந்து நிறுவனம் ஒன்று, கோடிகளை கொட்டித்தரவும் முன் வந்த போதும், அந்த விளம்பர படத்தில் நடிக்க நடிகை சாய்பல்லவி மறுத்து விட்டாரம்.. உண்மையிலேயே பெரிய மனசு தான்ப்பா சாய்பல்லவிக்கு…
29
4