அச்சச்சோ இங்க முடியல.. ஆயுர்வேத சிகிச்சையை தொடர்ந்து.. உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் பிரபல நடிகை..!

Author: Vignesh
30 November 2022, 6:00 pm
samantha -updatenews360
Quick Share

நடிகை சமந்தாவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்கள் குழந்தைகள் அறை, பள்ளி மற்றும் பொழுதுபோக்குகளுக்கு தேவையான அனைத்தும் கிட்ஸ் கார்னிவல் ஸ்டோரில் வாங்கலாம்

samantha-updatenews360

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா. விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் சமந்தா, தெலுங்கிலும் மகேஷ் பாபு உட்பட டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அதோடு கதாநாயகியை மைய்யப்படுத்திய கதைகளிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா. தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள நடிகை சமந்தா, அக்ஷய்குமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

samantha -updatenews360

இந்நிலையில் நடிகை சமந்தா, மயோசிடிஸ் என்ற அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 மாதங்களாக இந்த நோய்க்காக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் சமந்தா. அவர் நடித்துள்ள யசோதா படத்திற்கு சிகிச்சை பெற்றுக்கொண்டே டப்பிங் பேசியிருந்த சமந்தா, அந்த போட்டோவை வெளியிட்டிருந்தார். மேலும் அப்போதுதான் தனது நோயின் பாதிப்பு குறித்து உருக்கமாக ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார் சமந்தா.

samantha -updatenews360

தசை அழற்சி நோயால் ஒரு சில நாட்கள் தன்னால் படுக்கையில் இருந்து எழ முடியாத அளவுக்கு கடுமையான வலி ஏற்படும் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் சமந்தா. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஹைத்ராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

samantha -updatenews360

ஆனால் சமந்தாவின் செய்தி தொடர்பாளர் இதனை மறுத்தார். சமந்தா வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருவதாக கூறினார். இதனை தொடர்ந்து தனது நோய்க்கு வீட்டில் இருந்தப்படியே நடிகை சமந்தா ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. இதனால் சமந்தாவின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பதாகவும் கூறப்பட்டது.

samantha -updatenews360

இந்நிலையில் புதிய தகவலாக நடிகை சமந்தா மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மயோசிடிஸ் நோய்க்கு உயர் சிகிச்சை எடுத்துக்கொள்ள தென் கொரியா செல்லும்படி சமந்தாவை டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், இதற்காக சமந்தா விரைவில் தென் கொரியா செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

samantha -updatenews360

நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். தென் கொரியாவுக்கு சிகிச்சைக்கு செல்லும் சமந்தா, சிகிச்சை முடிந்த பின் முழு உடற் தகுதியுடன் தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் சமந்தா தரப்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை. சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ஷகுந்தலம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அப்படத்தின் போஸ்ட் ப்ரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 436

0

0