கவலையை மறக்க துடிக்கும் சமந்தாவின் புதிய புகைப்படங்கள்.. எப்படி மாறிவிட்டார் பாருங்க..!

Author: kavin kumar
7 November 2022, 4:44 pm

மாநாடு படத்தில் எஸ். ஜே சூர்யா சொல்வது போல், சமந்தா வந்தார், நடித்தார், முதலிடத்தை பிடித்தார், முதலிடத்தில் இருக்கிறார், Repeatu. இந்த வளர்ச்சி எப்போது நடந்தது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எந்தப் படத்தின் மூலம் இவருக்கான அங்கீகாரம் இவ்வளவு தூரம் கிடைத்தது என்றும் தெரியவில்லை.

ஆனால் காத்துவாக்குல இரண்டு காதல் படம் ரிலீஸான பிறகு சென்னை முழுக்க கதீஜா பற்றிய பேச்சுதான். 2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் இவரின் நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள்.

பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.கவர்ச்சியையும் மாசில்லாமல் ரசிகர்களுக்கு வழங்கும் தாராள மனசுக்காரியாக வலம் வரும் சமந்தா. தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில் சோபாவில் அமர்ந்த படி போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!