புஷ்பா 2 படத்தில் நடிக்கிறாரா சமந்தா.? விரைவில் அறிவிப்பு..

Author: Rajesh
8 April 2022, 11:46 am
Quick Share

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் வெளியாகி உலகளில் பிரபலமான திரைப்படம் தான் புஷ்பா. இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு, பிரபல முன்னணி கதாநாயகி சமந்தா, நடனம் ஆடி இருந்தார். இந்த பாடல் பட்டிதொட்டி எங்கும் மிகப் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

இதனை தொடர்ந்து மீண்டும் புஷ்பா 2 படத்தில் சமந்தா நடனம் ஆடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா நடனம் ஆகமாட்டார் என்று தகவல் வெளிவந்தது. அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டாணி குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில், நடனம் ஆடவில்லை என்றாலும், முக்கியமான கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 567

0

0