அவர பக்கத்துல வச்சுக்கிட்டு இப்படியா ஆடுவீங்க.. மன்மத லீலை நடிகை கலக்கல் டான்ஸ்..!

Author: Rajesh
9 April 2022, 2:11 pm

கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார். தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது. மேலும் சமீபத்தில் Release ஆன மன்மத லீலை படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இவர் ஒரு Fitness Freek, அதை நிரூபிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது, மன்மத லீலை படத்தில் நடித்த அசோக் செல்வனுடன் இணைந்து பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு செம்மையா டான்ஸ் ஆடிய வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அவர பக்கத்துல வச்சுக்கிட்டு இப்படியா ஆடுவீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?