குடிபோதையில் கூட பிறந்த அண்ணன்கள் என்னை மோசம் பண்ணிட்டாங்க – நடிகை சங்கீதா வேதனை!

Author: Shree
14 October 2023, 1:49 pm

தமிழ் சினிமாவின் மாடல் அழகியான சங்கீதா பின்னணிப்பாடகி , நடிகை என கோலிவுட் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். இவரது நடிப்பில் வெளியான உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். குறிப்பாக பிதாமகன் திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அத்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக இருந்தார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்வுகளுக்கு நடுவராக இருந்து வருகிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடன திறமைக்கு முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

இவர் பிரபல பின்னணிப் பாடகரான கிரிஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சில பட வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வரும் சங்கீதா சமீபத்திய பேட்டி ஒன்றுக்கு தனது மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துக்கொண்டார். அதில் நான் சம்பாதித்த பணத்தை என் குடும்பத்தினரே எடுத்துக்கொண்டார்கள். கூட பிறந்த அண்ணன்கள் என் பணத்தை குடிபோதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் நாசம் செய்துவிட்டார்கள்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் அத்தனையும் அவர்களுக்கு செலவு செய்ய வேண்டும் சந்தோஷமாக இருக்க வேண்டும் சேமிப்பு என்பதே கிடையாது. என் அம்மா கூட என் பணத்தை என் அனுமதியில்லாமல் எடுத்துக் கொள்வார்கள். நான் கிரிஷை திருமணம் செய்தப்பின் தான் வாழ்க்கையை நம்பிக்கையானதாக உணர்ந்து வாழ துவங்கினேன். அவர் வந்த பிறகு தான் எல்லாமே என் வாழ்க்கையில் மாறி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது என உருக்கமாக கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?