நானும் என் தங்கச்சியும் விஜய் கூட … எல்லாரும் அதை பாத்தாங்க – போட்டுடைத்த ஷகிலா..!

Author: Vignesh
20 February 2024, 12:08 pm
shakeela vijay
Quick Share

ஐட்டம் நடிகை, ஆபாச நடிகை என மிகவும் கொச்சையான நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் நடிகை ஷகிலா. இவர் ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். மோசமான படுக்கையறை காட்சிகள், கவர்ச்சி நடனம் என தமிழ் உள்ளிட்ட ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.

அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஜய் குறித்து பேசியுள்ளார். அதில், ஆரம்ப காலகட்டத்தில் நான் விஜய்யுடன் நடித்துள்ளேன். என்னுடைய தங்கச்சியும் அவருடன் நடனம் ஆடியுள்ளார். அப்போது, எங்களுக்கு பழக்கம் இருந்து வந்தது. பின்னர், எங்களுக்கிடையே ஒரு கேப் விழுந்தது. அவரின் அழகிய தமிழ் மகன் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்த சமயத்தில், விஜயுடன் எனக்கு காட்சிகள் வேண்டாம் என்று இயக்குனரிடம் சொல்லி இருந்தேன்.

அவர்களும் விஜய்க்கும் உங்களுக்கும் காட்சிகள் இல்லை என்று கூறி இருந்தார்கள். நானும் ஷூட்டிங்கிற்கு அதை நம்பி சென்றேன். அப்போது, முதல் நாளிலே எனக்கும் விஜய்க்கும் காட்சிகள் இருந்தது. நான் விஜய்யிடம் எப்படி பேசுவது நம்மை அவர் ஞாபகம் வைத்திருப்பாரா என்ற சந்தேகத்துடன் நின்று கொண்டிருந்தேன். ஆனால், அவர் வரும்போது ஹாய் ஷக்கீ என்று சொல்லிக்கொண்டே விஜய் வந்தார்.

shakeela vijay

நான் அதை பார்த்து அதிர்ச்சியாகி விட்டேன். இத்தனை வருடம் கழித்தும் அவர் நம்மை மறக்கவில்லை என்று நினைத்து பேசிக் கொண்டிருந்தேன். மொத்த யூனிட்டும் எங்கள் இருவரையும் பார்த்தது ஷாக் ஆனது என்று ஷகிலா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Wayand Shruti இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!
  • Views: - 256

    0

    0