“இந்த சம்பவம் எப்ப நடந்தது” கையில் பெண் குழந்தையுடன் !

Author: kavin kumar
12 October 2021, 5:44 pm
Quick Share

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில காலம் முன் தான் கர்ப்பமாக இருப்பதாக இவர் ஒரு பதிவு போட்டதாக நியாபகம். இந்நிலையில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக கணவனும், மனைவியும் இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் “இந்த சம்பவம் எப்ப நடந்தது” என்று கேள்வி கேட்கிறார்கள்.

Views: - 655

6

0