20 வருடங்கள் கடந்துவிட்டது……தங்கை குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்ட உருக்கமான பதிவு !

Author: kavin kumar
15 April 2022, 4:24 pm

நடிகை சிம்ரன் 90-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜய், அஜித், சூர்யா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் நடிகை சிம்ரன் பிரபலமானார்.

அஜித்,சூர்யா,விஜய் ஆகியோருடன் ‘ துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘நேருக்கு நேர்’, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சிம்ரன்.நடிகை சிம்ரன் முன்னணி நடிகையாக இருந்த பொழுது அவரின் தங்கையும் நடிகையுமான மோனல் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் ‘பத்ரி’ ,’ சார்லி சாப்ளின்’ , ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மோனல் 2002 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனது ரூம்-ல் தற்கொலை செய்து கொண்டது தமிழ் திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

இந்நிலையில் தற்போது நடிகை சிம்ரன் தனது தங்கையும் நடிகையுமான மோனல் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.இவர் இறந்து நேற்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில் பழைய புகைப்படங்களை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்திருந்தார் அதில்


நீ இல்லாமல் நான் இங்கே இருக்கலாம், ஆனால் எனக்கு தெரியும் நாம் எப்போதும் ஒன்றாக தான் இருக்கிறோம் என்று, 20 வருடங்கள் கடந்தாலும்,இன்றும் உங்களில் ஒரு சிறு பகுதி எப்போதும் என்னுள் வாழ்கிறது.நாங்கள் அனைவரும் உன்னை எப்போதும் மிஸ் செய்கிறோம், மோனு” என பதிவிட்டுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?