கதறி அழுத சினேகா.. சொந்த அண்ணனே இப்படியா..? அதுவும் அந்த பாட்டி வேற..!

Author: Vignesh
1 June 2023, 1:00 pm

2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக சினேகா தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

sneha prasanna - updatenews360

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.

sneha prasanna - updatenews360

இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது.

sneha prasanna - updatenews360.jpg e

இந்நிலையில், சமீபத்தில் சினேகா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கும்போது தான் பெண்ணாக பிறந்ததால் தன்னுடைய வீட்டிலேயே பட்ட கஷ்டங்கள் பற்றி மனம் திறந்து பேசி கண் கலங்கி அழுது இருக்கிறார்.

sneha-updatenews360-

அதில் தான் வீட்டில் நான்காவதாக பிறந்ததாகவும், தான் பெண் குழந்தை என்பதால் தன்னுடைய பாட்டி தன்னை மூன்று நாட்கள் தூக்கவே இல்லை என்றும், வீட்டில் எப்போதும் அண்ணன்களுக்கு மட்டும்தான் அதிகமான முக்கியத்துவம் இருக்கும் என்றும், நானாக இருந்தாலும் சரி தன்னுடைய அக்காள்களாக இருந்தாலும் சரி அவர்கள் அண்ணன்களுக்கு அடங்கி தான் போக வேண்டும் என உருகமாக தெவித்ள்ளார்.

sneha-updatenews360-

மேலும், வீட்டில் வேலைகளை செய்ய வேண்டும் என்று எப்போதும் தெரிவித்து கொண்டே இருப்பார்கள் என்றும், அண்ணன் ஹாயாக டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது பக்கத்தில் தான் தண்ணீர் இருக்கும் ஆனால் நாம் பக்கத்து அறையில் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தாலும் வந்து எடுத்துக் கொடுக்க வேண்டும் என அதிகாரம் செய்வதை வாடிக்கையாக வைத்து இருந்ததாகவும், உங்க பக்கத்துல தானே தண்ணி இருக்கு எடுத்து குடித்தால் என்ன அண்ணா என்று கேட்டால் நீ பொம்பள புள்ள தானே நீ வந்து எடுத்து கொடுக்கணும் தான் ஒரு ஆம்பள பையன் தண்ணி எடுத்துக் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திமிராக பேசுவாராம்.

sneha-updatenews360-

அதுவும் தன்னுடைய இரண்டாவது அண்ணனை சொல்லவே வேண்டாம் என்றும், தங்கள் வீட்டில் தன்னை ரொம்பவும் தொந்தரவு செய்து தன்னை பாடாய்படுத்துவது என்றால் தன்னுடைய இரண்டாவது அண்ணன் தான் என்று அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.

sneha

மேலும், இப்போதும் பல வீட்டில் இதே போல தான் ஆண் பெண் குழந்தைகளின் பாகுபாடுகள் இருக்கும் நிலையில் நடிகை சினேகாவின் வீட்டில் அவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறதா? என்று அவருடைய ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தொடர்ச்சியாக இந்த மாதிரி இனி யாரும் செய்யக்கூடாது என்று கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!