குடும்பமா சேர்ந்து அந்த விஷயத்தை பண்ணாங்க.. செல்வராகவன் குறித்து சோனியா அகர்வால் ஓபன் டாக்..!

Author: Vignesh
23 August 2023, 1:00 pm

தமிழ் சினிமாவில் 2000ம் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை சோனியா அகர்வால். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இவர் நடித்தது தமிழ் திரைப்படத்தில் தான். கோலிவுட் சினிமாவில் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வராகன் தான். அந்த படத்தில் இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கத்தால் காதலிக்க துவங்கினர். பின்னர் 2006ம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்துக்கொண்டனர்.

பின்னர், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். மேலும், இவர் நடித்த காதல் கொண்டேன், கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றியை தந்தன. சமீபத்தில் பிரபுதேவாவின் பாஹிரா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

இந்நிலையில், இவர்களின் விவாகரத்து குறித்து சோனியா அகர்வால் பேசியுள்ளளார். அதாவது, செல்வாவின் குடும்பத்தினர் தான் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், குடும்பமாகவே சேர்ந்து அனைத்து முடிவுகளையும் தன்னுடைய விஷயத்தில் எடுத்ததாகவும், இரண்டு வருடங்கள் இதனால் ஓய்வில் இருந்ததாகவும், நடிப்பை விட்டு விலகியதால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இரண்டு வருடங்கள் கழித்து செல்வாவிடம் நடிப்பு பற்றி கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஒரு முறை குஷ்பு மூலமாக சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் மீண்டும் நடிக்க வந்தேன் என்று சோனியா அகர்வால் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!