‘தெறி படத்துல அந்த ஒரு சீன்’ல ஏன் நடிச்சீங்க?’ காரணம் இதுதான்: சுனைனா Open Talk..!

Author: Rajesh
5 March 2023, 2:00 pm

கடந்த 2008ம் ஆண்டு தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தில் நகுல் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் சுனைனா. அதன்பின்னர், வம்சம், மாசிலாமணி, நீர்ப்பறவை, சமர், வனம், தெறி, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட படங்களில் சுனைனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விஷாலுடன் சுனைனா நடித்திருந்த லத்தி திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இந்நிலையில், பிரபல ஆன்லைன் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சுனைனா, சினிமா வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதை குறித்து மிகவும் ஜாலியாக பல்வேறு விஷயங்களை பற்றி பேசியுள்ளார். அப்போது, தெறி படத்தில் சில நிமிடங்கள் வரும் காட்சிகளில் ஏன் நடித்தார் என்பது குறித்தும் சுனைனா சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, ராதிகா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தெறி.

Sunainaa-2-Updatenews360-1

பேட்டியில் தெறி படத்தில் அந்த சில நிமிட காட்சிகளில் மட்டும் சுனைனா நடித்தது குறித்து சுனைனாவிடம் “இவங்க நல்ல ஹீரோயினா நடிச்சுட்டு வந்தாங்க. எதுக்கு அவங்க தெறி-ல நடிக்கணும். அப்ப உங்கள எல்லாருமே அவங்க வந்து ஒரு சீன்ல நடிப்பாங்க, ஒரு சாங் நடிப்பாங்க. அப்படி எல்லாம் அப்ரோச் பண்ணுவாங்க. தெறி -ல நடிச்சுருக்க கூடாதுன்னு தோணலயா” என கேட்கப்பட்டது.

Sunainaa_Updatenews360

அதற்கு பதில் அளித்த சுனைனா, “எனக்கு கட் ஃபீலிங் என்ன சொல்லுதோ அதுதான் நான் பண்ணுவேன். எல்லாருக்குமே நாம என்ன பண்ணனும்ன்னு சுயமான ஒரு முடிவு இருக்கும். உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை நீங்க செய்வீங்க. அந்த சமயத்துல என்ன தோணுதோ, அதை பண்ணுவீங்க. தெறி படத்துல நான் ரொம்ப விரும்பி தான் பண்ணுனேன். ஆனால், நான் பண்ண வேணாம்ன்னு நடிக்க மறுத்த படங்கள் ஒரு லிஸ்ட்டே இருக்கு” என சுனைனா ஜாலியாக கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!