வெப்சீரிஸ்-ல் களமிறங்கும் சன்னிலியோன்? நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீர்களா!

15 February 2020, 10:51 am
sunny updatenews360
Quick Share

நடிகை   சன்னிலியோன்   தற்போது காமெடி  வெப்சீரிஸ்-ல் நடிக்கவுள்ளார்.

பாலியல்  படங்களில்  நடித்துவந்த  நடிகை சன்னிலியோன்   தற்போது பாலிவுட் திரையுலகில்  பல படங்கள் நடித்து வருகின்றார்.  இந்நிலையில் காமெடி வெப்சீரிஸ்-ல் நடிக்கவுள்ளதாக புதுஅவதாரம்  எடுத்துள்ளார் சன்னி லியோன். 

பூஜா  பட் இயக்கிய  ஜிஸ்ம்- 2 என்ற  படத்தில் மூலம் சன்னி  லியோன் கடந்த 2012-ல் இந்தியில்  அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ராகினி எம்.எம்.எஸ்-2, ஜாக்பாட் மற்றும்  ஹேட் ஸ்டோரி-2 உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

sunny updatenews360

பரபரப்பு   நடிகையான சன்னிலியோன் மலையாளத்தில் மதுராஜா  மற்றும் ரங்கீலா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல்  தமிழில் ஜெய் மற்றும் ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு  மட்டும் நடனமாடியுள்ளார். அதைத்தொடர்ந்து தமிழில் வீரமா தேவி என்ற படத்தில்  நடித்துக் கொண்டு வருகிறார். தெலுங்கு மற்றும் கன்னடம் படங்களிலிலும் ஒரு கலக்கு  கலக்கியுள்ளார் சன்னி லியோன்

  சன்னி  லியோனுக்கு  இந்தியா முழுவதும்  லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே  உள்ளது. இதை தவிர இவர்சமூக வலைதளங்களில்   வெளியிடும் புகைப்படத்தல் மிகவும்பிரபலமாகவும் பரபரப்பாகவும்  பேசப்பட்டு வருகிறார்.

குழந்தைகள் தத்தெடுப்பு:

இவரின்  கணவர் பெயர்  டேனியல் வெபர். இவர் நிஷா  என்ற பெண் குழந்தையையும் தத்தெடுத்து  வளர்க்கின்றார். இதை தவிர வாடகைத்தாய் மூலம்  சன்னிலியோன் நோவா சிங் மற்றும் ஆசேர் என்ற குழந்தைகளையும்  தத்தெடுத்து வளர்க்கிறார்.
நான் செய்யும் சில   விஷயங்கள் சமூகத்திற்கு   எதிராகத்தான் இருக்கும் என  அண்மையில் இவர் தெரிவித்திருந்தது  மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது

sunny updatenews360

காமெடி  நடிகையாக  அவதாரம்:

இந்நிலையில் தான்   காமெடி தொடரில்   நடிக்க போவதை நினைத்து  உற்சாகமாக உள்ளதாக சன்னிலியோன்   தெரிவித்துள்ளார். இது காமெடி தொடர், இதைப்பற்றி  நான் அதிகமாக பேச முடியாது, ஆனால் எனக்கு காமெடி என்றால்   அதிகம் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மற்றவர்களுடைய   முகத்தில் புன்னகை ஏற்படுத்துவது, நல்ல விஷயம். அதை நான் செய்ய விரும்புகிறேன்  என அவர் தெரிவித்துள்ளார்.ஆனால்   ரசிகர்கள்   பலரும் இவர்க்கு   காமெடி வருமா என பல  கேள்விகள் கேட்டுள்ளனர்.

sunny updatenews360

அனாதை  இல்லம்:

இந்த   காமெடி தொடரில்   நடிப்பதன் மூலம் தனக்கு   கிடைக்கும் பணத்தை மும்பையில்  இருக்கும் செயின்ட் கேத்தரின்ஸ் அனாதை   இல்லத்துக்கு கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்   சன்னி லியோன். இவரும் , கணவரும் அடிக்கடி அந்த இல்லத்திற்கு   செல்வார்களாம். அதனால் தான் குழந்தையை தத்தெடுக்கும் எண்ணம் வந்ததாக   கூறுகிறார்கள். இவர் காமெடி தொடரில் நடிக்க போவதை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

sunny updatenews360
sunny updatenews360

Leave a Reply