சினிமாவில் பாலியல் தொல்லை? சிறுமிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை- பகீர் கிளப்பிய சுவாசிகா!
Author: Prasad14 August 2025, 5:14 pm
லப்பர் பந்து பிரபலம்…
தமிழில் “வைகை” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சுவாசிகா. அதனை தொடர்ந்து மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த அவர் மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார். இதனிடையே தமிழில், “கோரிப்பாளையம்”, “மைதானம்”, “சாட்டை”, “அப்புச்சி கிராமம்” போன்ற திரைப்படங்களில் நடித்த சுவாசிகா, “லப்பர் பந்து” திரைப்படத்தின் மூலம் மனம் கவர்ந்த நடிகையாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து “ரெட்ரோ”, “மாமன்” போன்ற திரைப்படங்களில் நடித்த அவர், சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சுவாசிகாவிடம் சினிமாவில் நடக்கும் பாலியல் தொந்தரவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்….

சிறுமிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை
“நான் 15 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். நான் அப்படி ஒரு பிரச்சனையை சந்தித்தது இல்லை. ஆனால் சினிமாவில் மட்டுமல்ல, பல துறைகளிலும் இந்த பிரச்சனை இருக்கிறது. வேலைக்கு செல்லாத பெண்களுக்கும் கூட இந்த பிரச்சனை உள்ளது. சிறுமிகளுக்கு கூட இங்கே பாதுகாப்பு இல்லை.
பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் தைரியமாக இருக்க வேண்டும். ஒருவர் நம்மிடம் தவறாக நடக்க முயற்சித்தால் அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், அவர்களை சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்கக்கூடாது” என சுவாசிகா பதிலளித்துள்ளார். இவரது பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
