என்னதான் ஆச்சு? காஷ்மீரில் இருந்து தனியாக சென்னைக்கு ரிட்டர்ன் ஆன திரிஷா.. கேள்வியெழுப்பும் நெட்டிசன்ஸ்..!

Author: Rajesh
5 February 2023, 5:30 pm
Trisha_Updatenews360
Quick Share

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் திரைப்படம் தளபதி67. இப்படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது குறித்து டீசர் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது.

trisha - updatenews360 1

இப்படம் குறித்து கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ, கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், வஸந்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி67 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்திலேயே தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பை சென்னை மற்றும் மூணாறில் நடத்தி முடித்தனர். இந்நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் படக்குழுவினர் 180 பேருடன் காஷ்மீர் பறந்துள்ளது.

அங்கு 2 மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. படக்குழுவினருடன் நடிகை திரிஷாவும் சென்றிருந்தார். இந்நிலையில், காஷ்மீர் சென்ற நடிகை திரிஷா 3 நாட்களில் மீண்டும் சென்னை திரும்பி இருக்கிறார். அவர் நேற்று முன்தினம், டெல்லி ஏர்போர்ட் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இதைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், என்னது திரிஷாவை அதுக்குள்ள கொன்னுட்டீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

லோகேஷ் படங்களில் ஒன்று ஹீரோயினே இருக்க மாட்டார் இல்லையெனில் அவர்களை கொன்றுவிடுவார். விக்ரம் படத்தில் பகத் பாசிலின் காதலியாக நடித்திருந்த காயத்ரியை கழுத்தறுத்து கொலை செய்யும் காட்சிகளும் இடம்பெற்று இருக்கும். இதனால் லியோ படத்திலும் திரிஷாவை அப்படி இரண்டே நாட்களில் கொன்றுவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களோ என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், “இதுக்கு ஏன் காஷ்மீர் வரைக்கும் கூட்டிட்டு போகணும். இங்கயே செட் போட்டு கொன்னுருக்கலாமே? ஐடியா இல்லாத பசங்க” என கமெண்ட் செய்து மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

Views: - 190

0

0