‘இனிமேல் எல்லாமே நீ தான்’…வைரலாகும் திரிஷா பதிவு..!

Author: Selvan
15 February 2025, 12:57 pm

காதலர் தினத்தில் த்ரிஷாவின் பதிவு

நடிகை திரிஷா பல வருடமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்,பல ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து வரும் இவர் 41 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

இதையும் படியுங்க: தைரியம் இருந்தா மஞ்சு வாரியர் கிட்ட போய் கேளுங்க.. கொந்தளித்த பிரபல நடிகை!

இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதாவது சில நாட்களுக்கு முன்பு நடிகை த்ரிஷாவின் செல்ல பிராணியான zorro மரணம் அடைந்தது,இதனால் அவர் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

Trisha new pet

ரசிகர்கள் பலரும் த்ரிஷாவிற்கு ஆதரவு அளித்து வந்தனர்,இந்த நிலையி தற்போது தன்னுடைய புது valentine என்று குறிப்பிட்டு,புது நாய் குட்டிட்டையை அறிமுகம் செய்துள்ளார்,அதற்கு lzzy என்ற பெயரும் சூட்டி,அது கூட இருந்த வீடீயோவை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

நடிகை திரிஷா தற்போது ஆர் ஜே பாலாஜியின் சூர்யா45 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இவருடைய ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தனர்,ஆனால் உடனே அவரது டீம் அதை சரி செய்து மீட்டு எடுத்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!