கொளுத்துற வெயிலில், கொழுத்து போன திரிஷாவின் Cycling Photos !

16 July 2021, 10:15 am
Quick Share

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் ஜோடி என்னும் படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து இன்று அதே ஹீரோயின் சிம்ரனுடன் இணை கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். இந்தநிலையில், சமீபத்தில் இவர் நடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்த, பரமபத விளையாட்டு ஹாட்ஸ்டர் OTT வலைதளத்தில் ரீலீஸ் ஆகி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், தற்போது இவர் ஃபிட்னஸ் விஷயத்தில் கவனமாக இருக்கும் ஆள் என்பதால், தற்போது சைக்கிளிங் செல்கிறார், அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 431

2

2