நடுவுல கொஞ்சம் ஆடைய காணோம்… Glamour வீடியோவை வெளியிட்டு சூட்டை கிளப்பிய வாணி போஜன்..!!

Author: Babu Lakshmanan
29 April 2022, 11:17 am

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மகான் படத்தில் இவரின் காட்சிகள் நீக்கப்பட்டதை குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். தற்போது வெளியிட்டு இருக்கும் வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!