அந்த மாதிரி உடலமைப்புடன் இருந்தால் உடனே கல்யாணம் – அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா!

Author: Rajesh
27 January 2024, 8:05 pm

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

vanitha

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார்.

பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் தான் மரணமடைந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வனிதாவிடம் அவரின் அடுத்த திருமணம் எப்போ? என கேட்டதற்கு,

vanitha

ஏன் இந்த கேள்வியே எல்லோருடையய மண்டையிலும் ஓடுது? நான் இப்போ கல்யாணம் பண்ண என்ன? பண்ணலனா என்ன? என கோபமாக பதிலளித்தார். மீண்டும் தொகுப்பாளர்… உங்களுக்கு கருப்பான மாப்பிள்ளை வேணுமா? வெள்ளையான மாப்பிள்ளை வேண்டுமா? என கேட்டதற்கு, “நான் இப்போ பச்சையா இருந்தால் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். குபேரன் மாதிரி என்று வனிதா நக்கலாக சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!