“செம ஹாட்” – விதவிதமான ஆடைகளில் கும்தாவாக போஸ் கொடுத்த வேதிகா

4 March 2021, 3:51 pm
Quick Share

குட்டி பிசாசே பாடலில் சிம்புவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டவர் வேதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் மதராசஸி என்ற படத்தில் அறிமுகமான இவர், அந்தப் படம் சரியாக போகாததால் கவனிக்கப்படவில்லை. ஆனால் அதற்கடுத்து முனி படத்தில் நடித்தபின் நல்ல ரீச் கிடைத்தது.

அதன்பின் காளை, மலை மலை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்திலும், வசந்தபாலன் இயக்கத்தில் காவியத்தலைவன் திரைப்படத்திலும் சிறப்பாக நடித்ததற்காக விஜய் டிவி அவார்ட்ஸ் உட்பட பல விருதுகளை வென்றார்.

தற்போது படவாய்ப்புகள் ஏதும் அமையாததால் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை உலவவிட்டு கொண்டிருப்பவர், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் பிங்க் நிற ஆடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் செம ஹாட் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 5396

17

0