“வயிற்றில் தையல் காயங்களுடன் யாஷிகா..” Yashika லேட்டஸ்ட் வீடியோ !

Author: Aarthi Sivakumar
17 August 2021, 10:11 am
Quick Share

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

யாஷிகா ஆனந்த்தின் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் விமர்சனங்களை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்த நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வயிற்றில் பெரிய தையல்களுடன் யாஷிகா இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், மனவருத்தம் அடைகிறார்கள்.

Views: - 573

2

4