கமலின் காதல் வலையில் சிக்கி தப்பித்து ஓடிய நடிகைகள்… சீரழிந்த சிம்ரன் – புட்டுப்புட்டு வைக்கும் பயில்வான்!

Author: Shree
6 August 2023, 10:41 am

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார்.

அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். தெரிந்தே இத்தனை நடிகைகளுடன் பழகி பிரிந்துவிட்ட கமல் ரகசியமாக பல நடிகைகளுடன் உறவு வைத்திருந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

ஆம், சிம்ரன் 2, 3 மூன்று படங்களில் கமல் ஹாசனோடு நடித்தார். கமல் ஹாசனும் சிம்ரனும் லிவிங் லைஃப் வாழ்ந்து வந்தார்கள். அந்த நேரத்தில் இருவரும் சேர்ந்து நடித்த படத்திற்கு சிம்ரனின் சம்பள பணத்தை அவருக்கு தெரியாமலே கமல் வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

பின்னர் சிம்ரன் தயாரிப்பாளரிடம் சென்று கேட்டதற்கு கமல் சார் வாங்கிட்டு போயிட்டாரே என சொல்ல ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த சிம்ரன். சரி ஓகே நம்ம தான் ஒன்னுக்குள்ள ஒண்ணா இருக்கிறோமே என நினைத்து விட்டுவிட்டாராம். அதன் பின்னர் கமல் விருமாண்டி படத்தின் அபிராமி, தேவர்மகன் படத்தின் கௌதமி உள்ளோட்டருடன் நெருங்கி பழகுவது பார்த்து கோப்பட்டு சிம்ரன் வேறொருவரை திருமணம் செய்துக்கொண்டு போய்விட்டார்.

அதே போல் தான் விருமாண்டி நடிகை அபிராமியும் கமல் ஹாசன் பிடியில் இருந்து தப்பிக்க திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிட்டார். பின்னர் கௌதமி என்னுடன் இருக்கும்போதே பூஜா குமாருடன் பழகுகிறயா? என சண்டைப்போட்டு என் மகளுக்கு இனி பாதுகாப்பு இல்லை என கூறி கமல் ஹாசனை பிரிந்தார். இப்படிதான் கமல் பல நடிகைகளை தன் காதல் வலைக்குள் சிக்கவைத்து பின்னர் கழட்டிவிட்டுவிட்டார் என பயில்வான் ரங்கநாதன் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

  • Superstar Rajinikanth's Upcoming Medical Trip to America ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
  • Views: - 501

    1

    0