சிவாஜி நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்பம் மீண்டும் ரீமேக் ஆகிறது : சிவாஜி ரோலில் அந்த பிரபலமா..?

Author: Rajesh
5 February 2023, 1:30 pm
sivaji-3-updatenews360
Quick Share

1987ம் ஆண்டு சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு”. மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படத்தை சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் சார்பாக சித்ரா லட்சுமணன் தயாரித்திருந்தார். மிக பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்த இப்படத்தில் சத்யராஜ் தனது அண்ணனை கொன்றவர்களை பழிவாங்கச் செல்லும்போது போலீஸாரிடம் மாட்டிக்கொள்வார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதியான சிவாஜி கணேசன், சத்யராஜ் நிரபராதி என உணர்ந்துகொள்வார். எனினும் சத்யராஜிற்கு எதிராக பல சாட்சியங்கள் இருக்க, சத்யராஜ் தனது வீட்டுச்சிறையில் இருப்பார் என சிவாஜி கணேசன் தீர்ப்பு வழங்கிவிடுவார். பின்னர், சிவாஜி கணேசனும், சத்யராஜும் நல்ல நண்பர்களாய் பழகி, இருவரும் இணைந்து குற்றவாளிகளை எப்படி பழிவாங்கப்போகிறார்கள் என்பதே மீதி கதை.

sathyaraj-updatenews360

சிவாஜி கணேசன், சத்யராஜ் ஆகியோர் மிகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். இத்திரைப்படம் சத்யராஜிற்கு மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாகவும் அமைந்தது. இந்நிலையில், “ஜல்லிக்கட்டு” திரைப்படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன், இத்திரைப்படத்தை மீண்டும் தயாரிக்கவுள்ளதாக ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.

இதில் சிவாஜி கணேசன் நடித்த கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளதாகவும், சத்யராஜ் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்க இன்னும் எந்த நடிகரையும் ஒப்பந்தம் செய்யவில்லை எனவும் கூறியிருக்கிறார். இத்திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் சித்ரா லட்சுமணன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 369

6

0