“அவங்களுக்கே டஃப் கொடுப்போம்ல” – சினிமா நடிகைகளுக்கு சமமாக கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்ட அகல்யா

1 March 2021, 4:52 pm
Quick Share

சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்து தற்போது சினிமாவிற்குள் வந்திருப்பவர்கள் வரிசையில் அகல்யாவும் சேர்ந்துள்ளார். சுமதி என்ற தொலைக்காட்சித் தொடரிலும் அலுவலகம் என்ற தொடரிலும் 2013ஆம் ஆண்டு முதல் 2015 வரை விஜய் தொலைக்காட்சியில் நடிக்க தொடங்கிய அகல்யா, அதன் பின் ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான மாமா நீங்க எங்க இருக்கீங்க இன்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சி அவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்றது. அதன்பின் நீங்க சொல்லுங்க டூட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குழந்தைகள் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது குழந்தைத்தனமான செய்கையால் கவந்தார். அந்த நிகழ்ச்சியும் பெரிய ஹிட்டானது. அதன்பின் பெரிய திரைக்கு சென்ற அகல்யா தேவராட்டம், ராட்சசி, தாராள பிரபு, K13 போன்ற படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

கொஞ்ச நாட்களாக சின்னத்திரை நட்சத்திரங்களும் பெரிய நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தொகுப்பாளினிகளும் அவர்களுக்கு ஈடு கொடுத்து வருகின்றனர். தற்போது அகல்யாவும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Views: - 792

2

0