சில்லு கருப்பட்டி இயக்குனரின் படைப்பு ! ஏலே படத்தின் டிரெய்லர் !

26 January 2021, 5:36 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் வரவு கணிசமாக அதிகரித்திருக்கும் நிலையில் அவர்களின் திரைப்படங்கள் மனித உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. சில்லுக்கருப்பட்டி, கேடி, இறுதிச்சுற்று, சூரரை போற்று விக்ரம் வேதா போன்றவை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற படங்கள்.

அந்த வரிசையில் சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா சமீம் தனது அடுத்த படமான ‘ஏலே’ படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டிருக்கிறார். ஐஸ் மாமா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமுத்திரகனி. விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களில் நடித்த மணிகண்டன் சமுத்திரகனியின் மகனாக நடித்துள்ளார்.

கிராமத்துக் கதையில் உருவாகியிருக்கும் இந்தப் படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபீர் வாசுகி இசையமைத்திருக்கும் இந்த படத்தில் அப்பா மகன் கதையை பற்றி பேசுவது போல டிரைலர் அமைந்துள்ளது. இத்திரைப்படம் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது

Views: - 11

0

0