9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த தளபதி விஜய் – ஒளிப்பதிவாளர் கூட்டணி!

25 February 2021, 12:50 pm
Quick Share

நண்பன் பட த்திற்குப் பிறகு விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி65 படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு திரைக்கு வந்த மாஸ்டர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பு பெற்றது.

உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆம், வெறும் 50 சதவிகித திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூல் குவிப்பது என்பது சாதாரண விஷயமல்ல
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி65 படத்தில் விஜய் நடிக்கிறார். வரும் ஏப்ரல் மாதத்தில் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஏற்கனவே இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதோடு, புகழ், பூவையார், அருண் விஜய் அல்லது சியான் விக்ரம், நவாசுதீன் சித்திக் அல்லது வித்யுத் ஜம்வால் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வந்தது. இதே போன்று அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர் என்று அறிவிப்பு வெளியானது.


இந்த நிலையில், தற்போது முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தளபதி விஜய்யின் நண்பன் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தளபதி65 படத்தில் இணைந்தது குறித்து மனோஜ் பரமஹம்சா கூறியிருப்பதாவது:

ஒட்டு மொத்த தேசமும் நேசிக்கக் கூடிய இந்த அற்புதமான மனிதருடன் மீண்டும் இன்னொரு பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நண்பன் பட த்திலிருந்து வெளியேறிய பிறகு மீண்டும் எப்போது இணைவோம் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். தளபதி65 படம் முழுக்க முழுக்க பான் இந்தியா படமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 8

0

0