கூலி படத்தை பார்த்த உதயநிதி…LCU படமா? என்னங்க இப்படி ஓபனா சொல்லிட்டாரு!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2025, 12:44 pm
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி வந்த நிலையில் ரஜினியுடன் கைகோர்த்த படம் கூலி. வரும் ஆக.,14ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது.
அனிருத் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. படத்தின் டிரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது. இந்த நிலையில் படத்திற்கான ப்ரீ புக்கிங்கில் புதிய சாதனை படைத்த கூலியை காண எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.
சுதந்திர தினம், கோகுலாஷ்டமி என விடுமுறையும் வருவதால், படம் நிசச்சயம் பல கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என படக்குழுவும் நம்பியுள்ளது.
இந்த நிலையில் கூலி படத்தை பார்த்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக Coolie திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.
‘கூலி’ மாபெரும் வெற்றி பெற ரஜினிகாந்த் சார், சன் பிக்சர்ஸ், சத்யராஜ் சார், லோகேஷ் கனகராஜ், அமீர்கான் சார், சகோதரர் அனிருத், ஸ்ருதிஹாசன் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
