தனுஷ் படத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விமானப்படை? அதிரடி முடிவெடுத்த படக்குழுவினர்!

Author: Prasad
4 June 2025, 12:16 pm

பதிலடி கொடுத்த தனுஷ்

“இட்லி கடை” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் “குபேரா” திரைப்படத்தில் நடித்துள்ளார். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலரும் சமீபத்தில் வெளியானது. 

air force did not give permission for dhanush movie shooting

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் தன் மீதான வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தார். “நீங்கள் என்னை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்திகளை பரப்புங்கள். எனது ஒவ்வொரு திரைப்படமும் வெளியாவதற்கு முன்பு என்னை குறித்த எதிர்மறையான விஷயங்களை பரப்புங்கள். ஆனால் எனது ரசிகர்களின் துணையோடு நான் என் வழியில் போய்க்கொண்டே இருப்பேன். இவர்கள் எனது ரசிகர்கள் மட்டுமல்ல. 23 வருடங்களாக என் கூடவே பயணித்த தோழர்கள். நான்கு வதந்திகளை பரப்பி இதனை காலி செய்துவிட வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதை விட முட்டாள்த்தனம் வேறு இல்லை” என பேசினார். இவர் பேசியது இணையத்தில் வைரல் ஆனது. 

தனுஷ் படத்திற்கு முட்டுக்கட்டை

“குபேரா” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ், “தேரே இஷ்க் மே” என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷ் விமானப் படை அதிகாரியாக நடிக்கிறாராம். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் சில காட்சிகளை லே, லடாக் ஆகிய பகுதிகளில் உள்ள விமானப்படைக்கு சொந்தமான பகுதிகளில் படமாக்க படக்குழுவினர் அனுமதி கேட்டிருந்தனராம். 

air force did not give permission for dhanush movie shooting

ஆனால் அவர்கள் அனுமதி கொடுக்கவே இல்லையாம். எனினும் படக்குழுவினர் மீண்டும் மீண்டும் அனுமதி கேட்டு முறையிட, அக்டோபர் மாதத்திற்கு பின் வாருங்கள், அப்போது பார்த்துக்கொள்ளலாம் என கூறிவிட்டனராம். “அக்டோபர் வரை காத்திருக்க முடியாது” என்று யோசித்த படக்குழு மும்பை நகரில் லடாக்கில் உள்ள விமானப் படையை போலவே ஒரு செட்டை அமைத்து அதில் அக்காட்சிகளை படமாக்க தற்போது முடிவு செய்துள்ளனராம். இவ்வாறு ஒரு தகவல் வெளிவந்துள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!