மாமியார் மருமகள் சண்டை… புகுந்த வீட்டை விட்டு வெளியேறிய ஐஸ்வர்யா ராய்?

Author: Rajesh
24 December 2023, 12:14 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஐஸ்வர்யா ராய் – அமிதாப் பச்சன் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

ஆனால், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் பச்சன் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று வெடித்துள்ளதாம். ஆம், ஐஸ்வர்யா ராய் தனது மரியார் ஜெயா பச்சன் உடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டு புகுந்த வீட்டை விட்டே வெளியேறி தனது அம்மா வீட்டில் வசித்து வருகிறாராம்.

இந்த விவகாரத்தில் தலையிட்ட அபிஷேக் பச்சனை பார்த்து ஐஸ்வர்யா ராய், ” உங்களுக்கு நான் முக்கியமா? இல்லை உங்க அம்மா முக்கியமா? என கேள்வி எழுப்பி கோப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மாமியார் மருமகள் இடையே ஏற்பட்ட இந்த பிரச்சனையால் விவாகரத்து வரை சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகிறது. ஏற்கனவே ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராய்யை தன் வீடு மருமகளாக்க விரும்பவே இல்லையாம். அமிதாப் பச்சனின் விருப்பத்தால் தான் அந்த கல்யாணமே நடந்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!