நாங்க விவாகரத்து செய்துவிட்டோமா? வதந்திகளுக்கு பளார் பதில் கொடுத்த வீடியோ!

Author: Rajesh
7 December 2023, 6:10 pm

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர்களின் விவாகரத்து செய்தி தான் பாலிவுட்டில் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறது.

எப்போதும் தனது கையில் அணிந்திருக்கும் திருமண மோதிரத்தை கழட்டாத அபிஷேக் பச்சன் திடீரென திருமண மோதிரத்தை கழட்டியிருப்பது தான் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், அதெல்லாம் இல்லை என்று அழுத்தமாக நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் , ஆரத்யா பச்சன் என ஒட்டுமொத்த குடும்பமே பங்கேற்று போஸ் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ விவாகரத்து வதந்திகளுக்கு பளார் பதில் கொடுத்துள்ளது. இதோ அந்த வைரல் வீடியோ:

  • Amaran movie 100 days celebration பாதி சம்பளத்தை ஆட்டைய போட்டுறாங்க…அமரன் வெற்றி விழாவில் SK ஓபன் டாக்.!